தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி – உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதற்காக உத்தரபிரதேசத்தைச்…

தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதற்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாளிதழின் ஆசிரியர் மீதும் தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கைது செய்ய காவல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்தி : விசைப்படகு மீது கப்பல் மோதல் – அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிர் தப்பியவர் கோரிக்கை

இதனிடையே பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை பிரசாந்த் உம்ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தியில் பேசியதற்காக பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த 12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். புலம்பெயர்ந்தோர் மீதான் தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட் சர்ச்சையானதையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகையை ஏற்படுத்தியதாக பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.