முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது: முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் மத ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
தொல் திருமாவளவன் அவர்களுக்கு மணி விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கட்சி நிதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் 533 கிராம் தங்க நகைகளை வழங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் அக்டோபர் இரண்டு காந்தியடிகளின் பிறந்தநாள், அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இதுவரை எந்த நிகழ்ச்சியும்
நடத்தப்படவில்லை ஆனால் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பானது மத ஊர்வலத்தை
முன்னெடுத்து இருக்கிறது. இது சமூகத்திற்கும் சமூக கோட்பாட்டிற்கும் எதிரானது. அதனால் அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ’சமூக நல்லிணக்க பேரணியை’நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் மத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மத ஊர்வலம் நடைபெற்றால் சமூக, சமய கோட்பாட்டிற்கு எதிராகவும், மதக் கலவரங்களை தூண்டும் விதமாகவும் நடைபெறும் என தெரிவித்தார். ஆகவே இந்த மத ஊர்வலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஆர்.எஸ் .எஸ் ரவியாக பணியாற்றி வருகிறார் எனவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் பேசிய திருமாவளவன் எச்.ராஜா
விசிகவை தொடர்ந்து சீண்டி வருகிறார், மேலும் விசிகவை தொடர்ந்து தீயசக்தி எனக் கூறி வருகிறார். தொடர்பு இல்லாத பிரச்சினையில் எல்லாம் எங்களைத் தொடர்புப்படுத்துகிறார். விசிகவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இது விசிகவின் மீதும் நாங்கள் பேசும் அரசியல் மீதும் எந்த அளவிற்கு அவருக்கு வெறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அவருடைய நோக்கம் தமிழ்நாட்டை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வெறுப்பு அரசியலின் துணையால் வன்முறை காடாக்க வேண்டியது தான் அவருடைய நோக்கம்.

அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் இயக்கமாக, அவர்களை கண்டிக்கும்
விதமாகவும், அவர்களுக்கு எதிராக மக்களை உருவாக்கும் இயக்காமாக விடுதலை
சிறுத்தை கட்சி இயங்குகிறது. இதனை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,
அதனால் அவருடைய காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி கொள்கிறார். அதனை நான்
ஏற்கவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது தொடர்ந்து திமுகவை விமர்சிப்பது மூலமாக ஊடக வெளிச்சத்தில் இருக்கலாம் என பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். அவர்களிடம் விளம்பரம் மோகம் உள்ளது. மேலும் திமுக அரசினை நாங்கள் தான் எதிர்க்கிறோம் என்றும் திமுகவிற்கு அடுத்த இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதன் கூட்டணி கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளப் பார்க்கிறார்கள். திமுக- பிஜேபி என்ற அரசியலை மாற்றி அமைக்க வேண்டும் என்ற திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

நாங்கள் அவர்களின் சதிவலைகளில் சிக்காமல், நாங்கள் துணிச்சலாக அவர்களின்
முகத்திரையை கிழிக்கக்கூடியவர்களாக, துணிச்சலாக சனாதனத்தை அம்பலப்படுத்தக்
கூடியவர்களாக இருப்பதனால் பாஜகவினர் எங்களை அம்பலப்படுத்தும் விதமாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் பேசினார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவிகள்

EZHILARASAN D

டோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

G SaravanaKumar

68 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா

G SaravanaKumar