14 நாட்களில் ரூ.772 கோடி – வசூல் வேட்டையில் ‘அனிமல்’..!

‘அனிமல்’ திரைப்படம் வெளியான 14 நாட்களில் உலகளவில் 772 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள…

‘அனிமல்’ திரைப்படம் வெளியான 14 நாட்களில் உலகளவில் 772 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனிமல்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை குவித்து வருகிறது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இத்திரைப்படம், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்தது. 2-வது நாளில் ரூ.236 கோடியும், 3-வது நாளில் ரூ. 356 கோடியும் வசூலித்தது. பாக்ஸ்-ஆபிஸில் சுனாமிபோல் எழுந்த  ‘அனிமல்’ தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது. 10-வது நாட்களில் ரூ.717.46 கோடி வசூலித்தது.

இதையும் படியுங்கள் : சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..! 

இந்நிலையில், ‘அனிமல்’ திரைப்படம் வெளியாகி 14 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.772 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் விரைவில் பதான், பாகுபலி உள்ளிட்ட ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் வரிசையில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.