அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி நிதி!

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு…

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட 2-வது முழுமையான பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட்டில், மதுரையில் ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம், சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைத்தல், முதலமைச்சரின் முக்கிய திட்டமான காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்தல், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.

அந்த வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அதற்காக ரூ.5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.