மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில் அவற்றின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வின் கூடுதல் தவணையாக ரூ. 1,09,019 கோடியை விடுவித்துள்ளது. இது 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ள வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் புறம்பானதாகும்.
இந்த வரிப் பகிர்வில் அதிகபட்சமாக உத்திர பிரதேசத்துக்கு 19, 208 கோடியும், பீகருக்கு 10,845 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 4466 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




