வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக
தமிழகத்தில் இன்றும், நாளையும் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய
வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற் பகுதியை அடுத்த 24 மணிநேரத்தில் வந்தடையும் என்றும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு
அருகாமையில் வரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் திருகோணமலைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 470 கிமீ ,
நாகப்பட்டினத்திலிருந்து தென்-தென்கிழக்கேய760 கிமீ , தொலைவில் உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற
வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில்
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம்
மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை தடை
விதித்துள்ளது.







