“ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம்” – #ShivSenaMLA-வின் ஆணவப் பேச்சு!

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன்பு அமெரிக்கா சென்றிருந்தார்.…

"Rs 11 lakh reward for Rahul Gandhi's tongue cutter" - #ShivSena MLA Controversy talk!

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி கடந்த சில நாட்களுக்குமுன்பு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து காங்கிரஸ் யோசிக்கும்” என்றார்.

இந்த நிலையில், இடஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்ச ரூபாய் தருகிறேன் என்று சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்குவாட் (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்குவாட் கூறுகையில், “இந்தியாவில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க நினைப்பதாக ராகுல்காந்தி வெளிநாட்டில் பேசியுள்ளார். இது காங்கிரசின் உண்மை முகத்தை காட்டுகிறது. இடஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் தருகிறேன்.”

இவ்வாறு எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்குவாட் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.