Asian Champions Trophy Hockey | இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்ளும் இந்திய அணி!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சீன அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சீன அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Asian Champions Trophy Hockey | Indian team to face China in the final!

பின்னர் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 – 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது. இந்தியா சீனாவிற்கு இடையேயான போட்டி என்பதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.