பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் தேவையற்ற செலவு மேற்கொள்ளப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 மாதிரிப் பள்ளிகளில், 31,152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீணாக செலவானதாகவும், 49 மாதிரிப் பள்ளிகளில், 21,086 மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ரூ.2.22 கோடி மதிப்பிலான சீருடைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சீருடைகளே பயன்படுத்தப்பட்டதாகவும் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மின் பாடத் தொகுப்புகள் மற்றும் மின் கற்றல் முகப்பை ( Portal ) உருவாக்குவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிப்பதில் முறைகேடுகள் நடந்ததாகவும், ஒப்பந்த மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒப்பந்ததாரரின் சேவைகளின் தரத்தை உறுதி செய்யாததால் ரூ.10.70 கோடி அளவுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டதாகவும், ரூ.5.17 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட சில உள் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதில் நேரிட்ட குறைபாடுகளினால், ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படாத தொழில்நுட்ப சேவைகளுக்கு ரூ.11.41 கோடி பணம் முறைகேடாக வழங்கப்பட்டதாகவும் CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.