இலங்கை தமிழர் வீடுகளை சீரமைக்க ரூ.108 கோடி ஒதுக்கீடு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.  சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கை தமிழர் முகாம்களில் மிகவும்…

இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கை தமிழர் முகாம்களில் மிகவும் பழுதடைந்த வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனக் கூறிய அவர், இதற்காக முதற்கட்டமாக 108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். அத்துடன், அரசு கலைக்கல்லூரி, பட்டய படிப்பு படித்து வரும் இலங்கை தமிழர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதியாக தலா 1.25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்குகள் நிறைவடைந்த பிறகு இலங்கை தமிழர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.