முகக்கவசம் அணியாததால் அபராதம் – திடீரென நடனமாடிய இளம்பெண்

ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண் நடனமாடிய சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு சிரிப்பை வரவழைக்கும் சம்பவமாக அமைந்தது. சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்…

ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த இளம் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண் நடனமாடிய சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு சிரிப்பை வரவழைக்கும் சம்பவமாக அமைந்தது.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர், முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பயணச் சீட்டு பரிசோதகர், முகக்கவசம் அணியாமல் இருந்த காரணத்திற்காக அப்பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பயணச் சீட்டு பரிசோதகருடன் பெண் ஒருவர் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பதை பார்த்த ரயில்வே பெண் காவலர் ஒருவர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு, திடீரென அந்த பெண் பாடிக்கொண்டே ஆட தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த பயணிகள் நகைப்புடன் கடந்து சென்றனர். பின்னர் அந்த பெண்ணிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.