தமிழ்நாட்டை சேர்ந்த முதியவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்குகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர்
பூல்பாண்டி (72). 1980ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பைக்கு சென்று அங்கு
சலவை தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரது மனைவி
சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
தமிழகம் திரும்பி வந்த பூல்பாண்டி, ஆதரவுக்கு யாரும் இல்லாததால் தனக்கு தேவையானவற்றை வாங்க முழு நேர யாசகரானார். தன் தேவைகளை குறைத்து, யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது, கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம், முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவது என அந்த பணத்தை நல்ல முறையில் செலவு செய்கிறார்.
இந்நிலையில், தான் யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வர்
நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.
அங்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி
விட்டு அதற்கான ரசீதை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து விட்டு சென்றார்.
—ம. ஸ்ரீ மரகதம்







