சேலம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1000 கோடி வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியுள்ளார் என அமைச்சர் கே.என்.நேரு
தெரிவித்தார்.
சேலம் அழகாபுரம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பல்வேறு
துறைகளின் சார்பில் 486 பயனாளிகளுக்கு ரூ.2.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள காலம், எவ்வளவு சீராக சாலைகள் இருந்தாலும், மற்ற வாகனங்கள் சாலையில் வரும்போது, வேகம் அதிகளவில் உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட 75 ஆயிரம் மனுக்களுக்கு முதலமைச்சர் தலைமையில்
நடைபெற்ற நிகழ்ச்சி 35 ஆயிரம் மனுகளுக்கு அந்த மேடையிலேயே தீர்வு
காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அதற்கான தீர்வு காணப்பட்டு வருகிறது என கூறினார்.
பனமரத்துப்பட்டி ஏரி, போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி ஆகிய மூன்று
ஏரிகளுக்கும் சீரமைக்க நிதி அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இதற்காக ரூ.167 கோடி
பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் மட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆயிரம்
கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியுள்ளார் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.








