உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ள ஜப்பானிய ரூபி ரோமன் திராட்சை சுமார் ரூ. 9.76 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழங்களைச் சாப்பிடுவது நம் உடலுக்கு எப்போதுமே நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. என்னதான் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கும் பழங்கள் என்றாலும், இந்தியர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்கள் அவற்றின் விலையைப் பார்த்து பழங்களை வாங்குகிறார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், ஜூசி திராட்சை என்றழைக்கப்படும் ஜப்பானில் ரூபி ரோமன் திராட்சை அதன் விலையினாலே உலக சாதனை படைத்துள்ளது.
உலகிலேயே அதிக விலை கொண்ட பழம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது. விலை காரணமாக உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. ஜப்பானில், ரூபி ரோமன் திராட்சை 2020 இல் ஏலத்தில் $ 12,000 (சுமார் ரூ. 9.76 லட்சம்) விற்கப்பட்டது.
ஒரு கொத்தில் உள்ள ஒரு திராட்சைப் பழத்தின் விலையும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் என செய்திகள் கூறப்படுகிறது. இந்த ரூபி ரோமன் திராட்சை, ஹியோகோ மாகாணத்தின் அமகாசாகியில் உள்ள பல்பொருள் அங்காடியில் விற்கப்படுகிறது.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் மற்றும் நெருங்கிய உறவுகளுக்கும் அன்பின் அடையாளமாக இப்பழங்களைப் பழங்களை பரிசளிப்பது ஜப்பானில் ஒரு பாரம்பரியம். இந்த பழம் எப்போதும் விலையுயர்ந்த பழங்கள் பிரிவில் வைக்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட இந்த பழம் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது. அதன் மிக விலையுயர்ந்த விலை குறித்து ஜப்பானில் உள்ள மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட பழங்களை அன்புக்குரியவர்களுக்கு எப்படி பரிசளிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக பிரீமியம் தரத்தில் எந்த ரூபி ரோமன் திராட்சை பழங்களும் காணப்படவில்லை. மிகவும் தரமான பழங்களைத் தேர்ந்தெடுத்து உறுதி செய்வதற்காக, இந்த பழங்கள் கடுமையான ஆய்வு செயல்முறைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த திராட்சை சரியாக மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சுப்பீரியர், ஸ்பெஷல் சுப்பீரியர் மற்றும் பிரீமியம்:
பிரீமியம் தகுதி பெற, திராட்சைகள் அனைத்து வகையிலும் சரியானதாக இருக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் ரோமன் திராட்சையின் இரண்டு தொகுதிகள் மட்டுமே பிரீமியம் தரமாக வகைப்படுத்தப்பட்டது. மேலும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் எதுவும் தகுதியும் பிரீமியம் தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது.







