ஐக்கூயு மொபைல் நிறுவனம் அவர்களது மொபைல் கேமிங் தளத்தை விரிவுபடுத்தும் விதமாக இந்தியாவில் கேமிங்கில் தீவிரமாக இருக்கும் இளைஞர்களுக்கு வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவோ, ஓப்போ, ரியல்மீ போன்ற நிறுவனங்கள் பல்வேறு முன்னிலை சிறப்பம்சங்களுடன் மொபைல்களை வெளியிட்டு வருகின்றன. அதன் கிளை நிறுவனமான ஐக்கூயுவும் சந்தையில் தனது விற்பனையை அதிகப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐக்கூயு தனது கேமிங் டெக்னாலஜியை விரிவுப்படுத்தும்படியாக இந்தியாவில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு சீனியர் கேமிங் ஆஃபிசர் வேலை தொடர்பான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த பணி 6 மாதங்களுக்கு மட்டுமே என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக உருவாக்கும் கேமிங்-கில் உள்ள நிறை – குறைகள் மற்றும் தரத்தை மேம்படுத்துவது போன்ற ஆலோசனைகளை தேர்வு செய்யப்படுவோர் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 6 மாத கால பணிக்கு ரூ.10 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.