அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின்!! – மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் புகழாரம்

அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது…

அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் மிக பிரம்மாண்டமான முறையில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், கருணாநிதியின் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், காந்தி மற்றும் ராஜாஜியின் பேரனுமான  கோபாலகிருஷ்ண காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : ”தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி” – குட்டியுடன் செல்லப்பிராணியை சீராக வழங்கி அசத்திய மாமன்…!

இந்நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, பேரன்களுக்கு பெயருண்டு என்றும், அந்த பெயரை காப்பாற்றுவது பெரிய வேலை என்றும் தெரிவித்தார். தான் ஒரு சாதாரண மனிதன் என்றும், அரசியலில் அ-னா, ஆ-வன்னா கூட தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்ட கோபால கிருஷ்ண காந்தி, அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.