ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,12,020 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.20,522 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.56,247 கோடியும் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் வரி யாக ரூ.8,646 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வருவாயைக் காட்டிலும் நடப்பாண்டு அதே கால கட்டத்தில் 30 சதவிகிதம் அதிகமாக ஜிஎஸ்டி வரிவருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி யமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கடந்த ஆண்டு ஏப்ரலில் குறைந்த பட்ச அளவாக ரூ.32,172 கோடி மட்டுமே ஜிஎஸ்டி கிடைத்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1,41,384 கோடி வருவாய் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








