முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் வணிகம்

வட்டமா இருந்தாலும் சதுரமா இருந்தாலும் சரி… அப்பளத்துக்கு வரி இல்லையாம்!

வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி, அப்பளத்துக்கு வரி கிடையாது என்று மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.

அப்பளம் இல்லாமல் மதிய உணவு நிறைவு பெறாது என்று சொல்பவர்கள் அதிகம். அனைத்து ஓட்டல்களிலும் சாப்பாட்டுடன் அப்பளம் கண்டிப்பாக இடம்பெறுவது வழக்கம். வடமாநிலங்களில் அப்பளங்கள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளி யிட்டிருந்தார். ‘வட்ட வடிவில் உள்ள அப்பளத்துக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு இருக் கிறது. ஆனால், சதுர வடிவில் இருந்தால் அதற்கு வரி விதிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த லாஜிக்கை புரியவைக்கக் கூடிய சார்ட்டட் அக்கவுன்டன்டை எனக்கு பரிந்துரைக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வர வாரியம் பதில் அளித்து பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், எந்த வடிவில் இருந்தாலும், அப்பளத்துக்கு ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!

Halley Karthik

டெல்டா, ஆல்பா வைரஸுக்கு எதிராகவும் செயல்படும் கோவாக்சின்; அமெரிக்க சுகாதார நிறுவனம்

Saravana Kumar

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது

Jeba Arul Robinson