முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி காலமானார்

ஜம்மு காஷ்மீரின் மூத்த பிரிவினைவாத தலைவர் சையது அலி கிலானி காலமானார். அவருக்கு வயது 92.

ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி (Syed Ali Shah Geelani). தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் உறுப்பினராக இருந்த அவர், பிரிவினைவாத கட்சிகளின் கூட்டமைப்பான தெஹ்ரீக்-ஏ-ஹூரியத்-தை நிறுவினார். பின்னர், அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவராக பணியாற்றினார். கடந்த 2020-ஆம் ஆண்டு அந்தப்பொறுப்பில் இருந்து விலகினார்.

கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்றிரவு காலமானார். இதுபற்றி, மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முப்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முப்தி தனது ட்விட்டரில், கிலானியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பல விஷயங்களில் அவருடன் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கிலாம். ஆனால் அவரது உறுதித் தன்மை மற்றும் தன்னம்பிக்கைக்காக அவரை மதிக்கிறேன் என்று தெரிவித் துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

சேலத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

Saravana Kumar