ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், பாலிவுட் பிரபலங்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
https://twitter.com/RRRMovie/status/1415544340785471498
Roar Of RRR என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 13ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.








