தொழில்துறையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலம் ஆக்கிய காமராஜரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை, அனல்மின் நிலையம் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டன.
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் ஆகியவை காமராஜர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டன.
திருச்சியில் பாரத் மிகுமின் நிறுவனம் ( பெல் ), துப்பாக்கித் தொழிற்சாலை நிறுவப்பட்டன. நீலகிரியில் கச்சாபிலிம் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது.
அனல்மின் நிலைய மின் உற்பத்திக்கான மூலப்பொருளான நிலக்கரி எடுக்க, காமராஜர் ஆட்சி காலத்தில் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டது.
காமராஜர் ஆட்சிக்கு முன் 3 ஆக இருந்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை, பொறுப்பேற்ற பின்னர், 8 ஆக உயர்த்தப்பட்டது.
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், நாட்டிலேயே தொழில்துறை வளர்ச்சியில் 2வது இடத்தை பிடித்தது தமிழ்நாடு.







