குட்டி இட்லி முதல் குஷ்பு இட்லி வரை பார்த்தாச்சு.. இது குச்சி இட்லியாம்ல!

குட்டி இட்லி முதல், குஷ்பு இட்லி வரை பார்த்துவிட்ட நமக்கு, குச்சி இட்லியை அறி முகப்படுத்தி இருக்கிறது பெங்களூரு ஓட்டல் ஒன்று. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த குச்சி இட்லியின் புகைப்படங்கள் வைரலா யின.…

குட்டி இட்லி முதல், குஷ்பு இட்லி வரை பார்த்துவிட்ட நமக்கு, குச்சி இட்லியை அறி முகப்படுத்தி இருக்கிறது பெங்களூரு ஓட்டல் ஒன்று.

இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த குச்சி இட்லியின் புகைப்படங்கள் வைரலா யின. குச்சி ஐஸ் போலவேம் குச்சி இட்லியை உருவாக்கி, தனியாக சட்னியும் சாம்பாரும் வைத்துள்ளனர். கைப்படாமல் வேகமாக சாப்பிட்டுச் செல்வதற்கு வசதியாக இந்த இட்லி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த குச்சி இட்லிக்கு நெட்டிசன்ஸ் பலத்த வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். பிரபல தொழிலதிபர், மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பதி வில், இந்த புகைப்படத்தை பகிர்ந்து, பாராட்டியுள்ளார்.

’ஆராய்ச்சியின் தலைநகரமாக அறியப்படும் பெங்களூரு, தனது புதிய சிந்தனையை (creativity) எதிர்பார்க்காத இட்லியிலும் புகுத்தி இருக்கிறது. குச்சி இட்லியும் சாம்பார், சட்னியும் அனைவரையும் கவர்ந் திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைர லாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.