தமிழ்நாட்டில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். பெயர் சேர்த்தலுக்கான விண்ணப் பத்துடன், வசிப்பிட முகவரி, வயதுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், தபால் அலுவலக சமீபத்திய கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்ப்பிக் கலாம். இந்த சிறப்பு முகாம் வரும் 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
http://www.nvsp.in; https://voterportal.eci.gov.in என்ற இணையதளங்களிலும், ‘VOTER HELP LINE’ மொபைல் ஆப் வழியாகவும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
நீர் தேங்கி இருப்பதால் சென்னையில் ஒத்திவைப்பு
சென்னையில் கனமழை காரணமாக, பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனால், வாக்காளர் சிறப்பு முகாமை, வேறு தேதிக்கு மாற்ற, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணைஅய்ர் சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் எழுதினார். அதையேற்ற தேர்தல் ஆணையம், சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முகாமை ஒத்திவைத்துள்ளது.