பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்… கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதையை பயன்படுத்துவர்.

இதையும் படியுங்கள் : மகளிர் பிரீமியர் லீக் | பெங்களூரை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி!

இருப்பினும் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகளில் பயணிப்பர். ரோப்கா மூலம் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் ஒரு சில நிமிடங்களிலேயே மலைக்கோயிலுக்கு சென்று விடலாம். இதன் காரணமாகவே பலரும் இதனை விரும்புவர். இந்த ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும் நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, இன்று (பிப்.28) பழனி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ரோப்கார் சேவை இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.