திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் கண்காட்சி

திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் கண்காட்சியில் சேவல் ஒன்று 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் வருடந்தோறும் சேவல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. குட்டியபட்டி அருகே தனியார் தோட்டத்தில் அனைத்து இந்தியா சேவல்…

திண்டுக்கல்லில் நடைபெற்ற சேவல் கண்காட்சியில் சேவல் ஒன்று 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வருடந்தோறும் சேவல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. குட்டியபட்டி அருகே தனியார் தோட்டத்தில் அனைத்து இந்தியா சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் கிளி மூக்கு விசிறி வால் சேவல் கண்காட்சி நேற்று நடந்தது.

இந்த வகை சேவல்களின் வால் நீண்டதாகவும் ஒரு மீட்டர் நீளமும் வளரக்கூடியதாக இருப்பதால் அவற்றை தங்கள் செல்லப்பிராணிகளாக கருதி பலரும் வளர்த்து வருகின்றனர். அழிந்து வரும் இனமான கிளி மூக்கு விசிறி வால் சேவல் இனத்தை பாதுகாக்க ஏழாவது ஆண்டாக சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சிக்கு உள்நாடு முதல் சவுதிஅரேபியா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சேவல்களை கொண்டு வருவது வழக்கம். கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக வெளி நாட்டிலிருந்து சேவல்கள் வரவில்லை.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்தக் கண்காட்சியில் சேவல் ஒன்று 3.5 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.