முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: வெற்றி யாருக்கு ? – மெஸ்ஸி கருத்து

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னணி வீரர் மெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

 

உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தாண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டியில், மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக விளையாடுகின்றன. இதில், அதிக ரசிகர்கள் பட்டியலை கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி, ராபர்டோ லெவன் டோஸ்கி, கைலியன் பேப்பி உள்ளிட்டோர் தங்கள் நாட்டிற்காக களமிறங்க உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 344 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டியில் வெற்றி பெற போகும் அணி யார்? என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்தநிலையில், அர்ஜென்டினாவின் வீரர் மெஸ்ஸி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி யாருக்கு என்ற ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து இந்த மூன்று அணிகள்தான் தனக்கு பேவரைட் என்று கூறியுள்ளார்.

இந்த அணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். சிறந்த முறையில் போட்டியை தொடங்குவோம் என்ற அவர், தற்போதைய சூழலில் வேறெதுவும் சொல்ல முடியாது என்றும், களத்தில் மற்ற வீரர்கள் பற்றி தெரிந்து கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்ஸி கேப்டனாக உள்ள அர்ஜென்டினா அணி இரண்டு முறை உலகக்கோப்பை வென்றுள்ளது. இதனிடையே, நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி மெஸ்ஸிக்கு கடைசி போட்டியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே, 4 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள நிலையில், இது மெஸ்ஸிக்கு 5-வது உலகக்கோப்பை போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? – சீமான்

Web Editor

சிறுமிக்கு வன்கொடுமை; 7 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிமன்றம்

G SaravanaKumar

எப்படி இருக்கிறது குருதி ஆட்டம்- விமர்சனம்

Dinesh A