‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’, ஜூலை 26-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிகர் மாதவன் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், 4 மொழிகளில் வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ ஜூலை 26-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அமேசான் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளது.








