மனிதனே மனிதனின் கழிவு அள்ளும் பணிக்கு இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை மொத்த விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் மனிதர்களை கொண்டு கழிவுகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, சென்னையில் உள்ள இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியை தொடர்ந்து புதிய ரோபோ ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ கழிவுநீர் ஓடைகளில் இறங்கி தாமாகவே சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலம், பாதாளசாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் அவலம் நிறுத்தப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
இந்த கருவியானது தானாகவே நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்படுள்ள இந்த ரோபோவை, தாம்பரத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இறந்தவரின் மனைவி நாகம்மாவிற்கு அதிகாரிகள் வழங்கினர். இவர் தற்போது வீட்டுவேலைக்கு சென்று கொண்டுள்ளார். இந்த புதிய கருவி வழங்கப்பட்டிருப்பது மூலம் இவர், ரோபோவை கொண்டு பாதாள சாக்கடைகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இந்த ரோபோ செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முறையில் தற்போது இந்த ரோபோ வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் 9 ரோபோக்களை பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் முழுமையாக வெளிசந்தையில் கிடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.