கிரிக்கெட் ஜாம்பவான் சாதனையை சமன்செய்த ருத்ராஜ்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் நேற்று மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த…

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் நேற்று மோதிய நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 46-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதின. இதில் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து, சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி களமிறங்கின. இருவரும் ஆளுக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற பாணியில் அதிரடியாக போட்டியை நகர்த்தி சென்றனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்து வீச்சாளர்கள் விழிபிதுங்கினர்.

போட்டி தொடங்கியதில் இருந்து சிக்சரும், பவுண்டரிகளும் என பந்துகளை பறக்க விட்ட இந்த ஜோடி, 182 ரன்களை எடுத்து கொடுத்த பிறகே பிரிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களை எடுத்ததால், 31 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ருத்ராஜ் கெய்க்வாட் சமன் செய்தார். அதுமட்டும் இல்லாமல் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற பெருமையையும் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே ஜோடி படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.