முக்கியச் செய்திகள் தமிழகம்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் மூலம் பொதுமக்களும் பள்ளிக் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல, வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அண்மைச் செய்தி: உக்ரைன் மீது போர் தொடுக்கக்கூடும் ரஷ்யா: இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் – ஐ.நா

இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது எனக் கூறினர். மேலும், சரணாலயம் பகுதியில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதனை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்கள்

Web Editor

நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் தங்க, வைர நகைகள் திருட்டு; போலீசில் புகார்

Jayasheeba

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Jayasheeba