#RJBalaji நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் டீசர் எப்போது? வெளியான அப்டேட்!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி கடந்த 2010-ம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, 2013ம் ஆண்டு முதல் தமிழ்…

RJBalaji ,Sorgavasal ,Siddharthvishwanath

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘சொர்க்கவாசல்’ படத்தின் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்.ஜே பாலாஜி கடந்த 2010-ம் ஆண்டு ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி, 2013ம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 2015-ம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நண்பனாக நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, புகழ், ஜில் ஜங் ஜக், தேவி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான LKG திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2020ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன் தொடர்ச்சியா நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்து வருகின்றார். ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள்.

இதையும் படியுங்கள் : Splendor பைக் திருடர்கள் இருவர் கைது – ஆர்டரின் பெயரில் திருடித் தருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்!

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இயக்குநர் பா. ரஞ்சித் இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில், ‘சொர்கவாசல்’ திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.