முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரத்தை கணிக்கும் சிஎம்ஐஇ என்ற அமைப்பு வேலை வாய்ப்பின்மை குறித்து ஆய்வு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில், வேலைவாய்ப்பின்மை அதிகம் காணப்படும் மாநிலங்களில் ஹரியானா முதல் இடமும், சத்தீஸ்கர் மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் நகரப்பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 9.57 சதவிதிகமாகவும், கிராமப்பகுதிகளில் 7.68 சதவிகிதமாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஹரியானாவில் 37.3%, ஜம்மு காஷ்மீரில் 32.8%, பஞ்சாப்பில் 7.4%, ஹிமாச்சல் பிரதேசம் 7.3%, ராஜஸ்தான் 31.4%, உத்தரபிரதேசம் 3.9%, டெல்லி 8.2%, பீகார் 12.8%, குஜராத் 2.6%, மத்திய பிரதேசம் 2.6%, திரிபுரா 16.3%, மேற்குவங்காளம் 7.4%, ஜார்கண்ட் 17.3%, ஒடிசா 2.6%, சத்திஸ்கர் 0.4 சதவீதம், மகாராஷ்டிரா 2.2%, தெலங்கானா 6.9%, கோவா 13.7%, கர்நாடகா 3.5%, ஆந்திரா 6%, புதுச்சேரி 5.2%, கேரளா 6.1%, தமிழ்நாடு 7.2 சதவிகிதமாகவும் உள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் 6.8 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, ஆகஸ்ட் மாத தரவுகளின் படி 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

G SaravanaKumar

புதுக்கோட்டை தேர் விபத்து; அண்ணாமலை கண்டனம்

G SaravanaKumar

கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன்

G SaravanaKumar