அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்திவசிய பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள்…

இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்திவசிய பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது இந்த விலை உயர்வு பட்டியலில் அத்தியாவசிய மருந்துகளும் இணைந்துள்ளன.

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் சுமார் 800 மருந்துகளின் விலை தற்போது உயர்த்தப்படுகிறது. இவற்றின் விலை 10.7 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், இதய நோய், ரத்த அழுத்தம், தோல் நோய் போன்ற முக்கியமான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதே மருந்துப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.