போரால் ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சார்ந்த சந்தோஷ் கண்ணன் அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி, சென்னை வழியே இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அவரை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர் பரமக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் கிரிமியா பகுதியிலுள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்த பிருந்தா என்ற மாணவியும் நாடு திரும்பியுள்ளார். தூத்துக்குடி விமானநிலையம் வந்த அவரை, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாறிய காரைக்குடி இஸ்லாமியர்கள்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவி பிருந்தா, உக்ரைன் உடனான போர் காரணமாக ரஷ்யாவில் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கூறினார். இதனால் அங்கு தங்கியிருந்து படிப்பதற்கான சூழல் இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். எனவே, ரஷ்யாவில் மருத்துவம் படிக்க கூடிய இந்திய மாணவர்களும் தாயகம் திரும்பி வருவதாகவும் பிருந்தா தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








