தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து 5 மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுடன் மண்டல வாரியாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடம் காணொலி மூலம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாறிய காரைக்குடி இஸ்லாமியர்கள்
இதன் தொடர்ச்சியாக, தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் வேளாண் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








