ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் டெல்லி கேப்பிடல்ஸ் இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் டி20 தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மோதுகின்றன. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம்…

ஐபிஎல் டி20 தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மோதுகின்றன.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.

லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 60-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இதையும் படியுங்கள் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி – வெற்றி வாகை சூடி ஃபிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது கொல்கத்தா அணி!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அரங்கேற உள்ளது. அதில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையடுத்து, இரண்டாவது போட்டி இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு   மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் முக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற பெங்களூரு அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

இதையும் படியுங்கள் : சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இன்று நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் யார் டெல்லி அணியை யார் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியை அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.