பள்ளிக் குழந்தைகளில் பசியின்றி கல்வி கற்பதை உறுதி செய்ய முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும் கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அமல்படுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டமர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அந்த உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படுமென சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி,
திங்கட்கிழமை: காய்கறி சாம்பாருடன் உப்புமா,
செவ்வாய்க்கிழமை: காய்கறி சாம்பாருடன் கிச்சடி,
புதன் கிழமை: காய்கறி சாம்பாருடன் ரவா பொங்கல் (அ)வெண்பொங்கல்,
வியாழக்கிழமை: காய்கறி சாம்பாருடன் உப்புமா,
வெள்ளிக்கிழமை: கிச்சடி, ஆகியவை வழங்கவும், உள்ளூரில் விளையும் காய்கறிகள், சிறு தானியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அரசு முதன்மை செயலாளர் கூறியுள்ளர்.







