மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம்…

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.

அதன்படி தகுதியான பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடைகள் மூலம் நேரடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிதித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.