2019ல் ஆர்டர், 2023ஆம் ஆண்டு டெலிவரி : வெறுத்துப்போன வாடிக்கையாளர் 

அலி எக்ஸ்பிரஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில்  2019 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட பொருள் சுமார் 4 ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் ஷாப்பிங் மக்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, முன் எப்போதும்…

அலி எக்ஸ்பிரஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில்  2019 ஆம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட பொருள் சுமார் 4 ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் ஷாப்பிங் மக்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, முன் எப்போதும் இல்லாத வகையில் வசதியை வழங்குகிறது. மளிகை சாமான்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை, ஆர்டர் செய்தவுடன்  வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகிறது. சில பொருள்கள் ஆர்டர் செய்த அதே நாளில் கூட டெலிவரி செய்யப்படுவதுண்டு. செலக்சன், தரமான பொருள்கள், ரிட்டன், கேரண்டி, உள்ளிட்ட காரணங்களால் ஆன் லைன் ஷாப்பிங் தளங்களின் வியாபாரம் பலமடங்கு உயர்ந்து வருகின்றன.
ஆனாலும் சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்யும் பொருள்கள் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படுவதில்லை. அதற்காக கஸ்டமர்  கேரில் சண்டை போட்ட  அனுபவம் பலருக்கு இருந்திருக்கும். அதுபோன்ற அனுபவம்தான் அலி எக்ஸ்பிரசிஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு ஏற்பட்டுள்ளது.
நிதின் அகர்வால் என்பவர் அலி எக்ஸ்பிரசில் கடந்த 2019ஆம் ஆண்டு சில பொருள்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் 2023ஆம் ஆண்டு அவருக்கு அந்த பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக ரசீதுடன் எப்போது  நம்பிக்கை இழக்காதீர்கள் என்ற தலைப்பில்  அவர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சில சீன செயலிகளுக்கு  மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.