8வது முறையாக மீண்டும் வருகை | பிரதமர் மோடி இன்று நெல்லையில் பிரசாரம்!…

இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.  நாடாளுமன்றத் தேர்தல்…

இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டுக்கு  பிரதமர் மோடியின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த வகையில் இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். வாக்கு சேகரிப்பதற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.