“சமூக வளைத்தளங்களில் இருந்து ஓய்வு” : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு – காரணம் இதுதானா..?

தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து…

தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தனது அடுத்த திரைப்படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டு கூறியிருப்பதாவது ;

https://twitter.com/Dir_Lokesh/status/1736000741167558976

எனது ‘G Squad’தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள ‘Flight Club’ திரைப்படத்திற்கு ஆதரவளித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.  எனது அடுத்த படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். அந்த நேரத்தில், என்னை அணுக முடியாது.

நான் அறிமுகமானதில் இருந்து நீங்கள் என் மீது பொழிந்த அன்பிற்கும், ஆதரவிற்கும் பார்வையாளர்களுக்கு மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதுவரை அனைவரும் பார்த்துக்கொள்ளுங்கள். நேர்மறையாக இருங்கள் மற்றும் எதிர்மறையை புறக்கணியுங்கள்! என அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.