ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 358 பேரில், 114 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 114 பேர் குணமடைந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாட்டின் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து விளக்கமளித்தார். 108 நாடுகளில் ஒமிக்ரான்…

நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 114 பேர் குணமடைந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாட்டின் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து விளக்கமளித்தார். 108 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை 26 பேர் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கூட்டம் கூட தடை, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையில், நாட்டில் அதிகபட்சமாக கேரளாவிலும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 358 பேரில், 114 பேர் குணமடைந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.