மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மாற்றமா?

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மாற்றும் திட்டம் இல்லை என மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துப்பூர்வமாக பதில்…

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மாற்றும் திட்டம் இல்லை என மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“அரசு நிர்வாகத்தில் ஒட்டுமொத்த பணித்திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், தேவையற்ற சட்டங்களை ஒழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் (2020-2023) நடப்பு ஆண்டு உட்பட 56(j) விதியின் கீழ் 122 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மத்திய அரசு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை மாற்றும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. குடிமைப்பணிகள், மத்திய அரசுடன் தொடா்புள்ள பதவிகளில் உள்ள பெண்கள் மற்றும் மனைவி இல்லாத ஆண்கள், தங்களின் 18 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளைப் பராமரிக்க, அவர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தில் 730 நாள்கள் வரை விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

இதுவே அவா்களின் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், அவாகளை பராமரிக்க அந்தக் குழந்தைகள் குறிப்பிட்ட வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற எந்த வயது வரம்பும் இல்லை” என்று அமைச்சர் தெரவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.