மும்பையில் இசை நிறுவன தலைமை செயல் அதிகாரியை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையில் இயங்கி வரும் மியூசிக் கம்பெனி ஒன்றில் சிஇஓ ஆக இருப்பவர் ராஜ்குமார் சிங். இவரது அலுவலகத்திற்குள் புகுந்த மகாராஷ்டிர ஷிண்டே பிரிவு எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே தலைமையிலான 10க்கும் மேற்ப்பட்டோர் துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக அவரை கடத்தி சென்றனர்.
எம்எல்ஏ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பாட்னாவைச் சேர்ந்த மனோஜ் மிஸ்ராவுவுடான தொழில்ரீதியிலான கடனை முடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டல் விடுத்த அந்த கும்பல் அவரை விடுவித்தது.
பின்னர் ராஜ்குமார் சிங் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து போலீசார் எம்எல்ஏ மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.







