முக்கியச் செய்திகள் தமிழகம்

பணிக் காலம் நிறைவு: தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு முக்கிய பதவி!

ஓய்வுபெறவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய பணிக் காலம் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. இரண்டு முறை அவருக்கு தமிழக அரசின் பரிந்துரை பேரில் பணி நீட்டிப்பு வழங்கியது மத்திய அரசு.


சண்முகம் பணி ஓய்வு பெற்றதால் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இன்று நியமனம் செய்யப்பட்டார். அடுத்த சிறிது நேரத்தில் தலைமைச் செயலாளர் அந்தஸ்துடன் கூடிய தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் கே.சண்முகத்தை நியமித்து அறிவிப்பு வெளியானது. தற்காலிகப் பணியான இப்பொறுப்பில் சண்முகம் இன்னும் ஓராண்டு வரை நீடிப்பார். சண்முகத்திற்கான மாத ஊதியமாக 2.25 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், 1985 ஆம் ஆண்டு ஆட்சிப் பணி அதிகாரியாக பொறுப்பேற்றார். தமிழக அரசின் சுகாதாரம், தொழில், நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் செயலாளராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், பொது விநியோகத் துறையிலும் பணியாற்றியுள்ளார்.


நீண்ட காலம் நிதிச் செயலாளராக இருந்த அவர், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அரசு துறைகளில் இவரின் நீண்ட அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஓய்வுக்குப் பிறகும் பதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

மியான்மரில் துப்பாக்கி சூடு; உலக தலைவர்கள் கண்டனம்!

Jeba Arul Robinson

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

Saravana Kumar

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3.7 லட்சத்துக்கும் அதிகமான தொற்று!

Ezhilarasan

Leave a Reply