அம்பேத்கர் படத்திற்கு மரியாதை: திமுகவினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

திமுகவின் அனைத்து மாவட்டக்கழக அலுவலகங்களில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம்…

திமுகவின் அனைத்து மாவட்டக்கழக அலுவலகங்களில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை இனி சமத்துவ நாள் என்று கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து இன்று கொண்டாடப்படும் சமத்துவ நாள் விழாவையொட்டி திமுக மாவட்ட அலுவலகங்களில், அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 238 சமத்துவபுரங்களிலும் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலையை முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்தை வைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி சமத்துவ நாளைக் கொண்டாடிட வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.