அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார், ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இதுவரை மனுதார்கள் வழக்கு குறித்த ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், ஆவணங்கள் கிடைத்த பிறகு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது நீதிபதி வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதரார்கள் வழங்க வேண்டும் என
தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை ஆண்டு கணக்கில் நிலுவையில் வைக்க முடியாது
எனவும் அடுத்த விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என
தெரிவித்த நீதிபதி, அன்றே முடிவு எட்டப்படும் என அறிவித்து, விசாரணையை ஏப்ரல் 22
ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.







