அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசிற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருகை தந்தனர். அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக உற்சாக முழக்கம் எழுப்பி அவர்களை வரவேற்றனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
1. நடைபெற்று முடிந்த உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது
2. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை, நகர, ஒன்றிய, பகுதி, வட்ட, மாவட்ட செயலாளர்களுக்கு ஒப்புதல் தீர்மானம்
3. அதிமுகவை சிறப்பான எதிர்க்கட்சியாக திறம்பட வழிநடத்தி வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
4. மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம்
5. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இவை உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.