திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்குவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்…

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில், “தற்போது தொடர்ச்சியாக திருவிழா காலமாக இருப்பதால், கொரோனா நோய் தடுப்பு வழி முறைகளை, பொதுமக்கள் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளதாகவும், தமிழகம் இன்னும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடவில்லை என்று குறிப்பிடுள்ளார். இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது கொரோனா நோய் தொற்று பரவலை அதிகரிக்கவே செய்யும் என்றும் மனுவில் குறிப்பிடுள்ளார்.

அன்மையில், கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. திரையரங்கங்கள் 100% இருக்கைகளுடன் இயங்கும் போது பார்வையாளர்கள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே இருக்கும். கொரோனா முதல் அலையின் போதே, அதாவது மாஸ்டர் பட வெளியீட்டின் போது கொரோனா நோய்த்தடுப்பு விதிகள் மீறப்பட்டதாக 50க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தத்து.

தற்போது தீபாவளி பண்டிக்கையை ஒட்டி எனிமி, வா டீல் ஆகிய உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளன. இது கொரோன பரவலுக்கு காரணமாக அமையும். எனவே, சினிமா திரையரங்குகள்ள், 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்தும், நவம்பர் 3, 4 தேதிகளில் திரையரங்குகளை மூடவும் உத்தரவிட வேண்டும்” என அவர் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.