கொரோனா; நாடு முழுவதும் ஒரே நாளில் 549 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 14,313 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்த்தில் புதிதாக, 14,313 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக…

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 14,313 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்த்தில் புதிதாக, 14,313 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,42,60,470ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 11 சதவிகிதம் குறைவாகும்.

அதேபோல புதிதாக 549 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,57,740 ஆக அதிகரித்துள்ளது. 13,543 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,36,41,175 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,61,555 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில், இதுவரை 2,467,58,782 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,04,471 பேர் உயிரிழந்துள்ளனர். 2,235,53,366 பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

https://twitter.com/MoHFW_INDIA/status/1454296576134836231

தொற்று பாதிப்பில் 4,67,71,979 என்ற எண்ணிக்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 97,080 பாதிப்புகளுடன் 113வது இடத்தில் உள்ளது. இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.